Editorial / 2020 மே 06 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்னடத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் முப்தி. இந்தப்படத்தை இயக்குநர் நாரதன் என்பவர் இயக்கி இருந்தார்.
இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதை தமிழில் சிம்பு மற்றும் கொளதம் கார்த்திக் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு பணிகளை ஆரம்பித்தார் நார்தன்.
முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும் தயாரிப்பளர் ஞானவேல் ராஜாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஊரடங்கு நிலை சரியானாலும் கூட சிம்பு தயாரிப்பாளர் பிரச்சினை தீருமா என்பது சந்தேகம் தான் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ தற்போது கே.ஜி.எப் புகழ் ஹீரோ யஷ்ஷுக்கு தற்போது ஸ்க்ரிப்ட் தயார் செய்து வருகிறாராம் நார்தன்.
கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் முடிவடையும் நிலையில் இருப்பதால் அனேகமாக நார்தன் டைரக்சனில் தான் யஷ் அடுத்தததாக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago