2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிம்புவுக்கு கல்யாணம்?

George   / 2016 ஜனவரி 19 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் திருமணம்தான் செய்வேன் என்று ஒற்றைக் காலில் நின்ற நடிகர் சிம்பு, பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவுடனான காதல் முறிவு, ஹன்சிகாவுடனான காதல் முறிவு ஆகியவை சிம்புவை ரொம்பவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இருந்தும் தான் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன் என்று விடாபிடியாக இருந்தவருக்கு, அண்மையில் காதல் தோல்வியை பற்றிய சிம்புவின் பீப் பாடல் பிரச்சினையும் அவரை மிகவும் மன வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 

இந்த வேதனையிலிருந்து சிம்புவை மீட்க அவரது பெற்றோர்களும் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.  அண்மையில், பெற்றோர் மற்றும் குடும்ப நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அந்த இடத்தில் பெற்றோர்கள் சிம்புவை விரைவில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்த, சிம்புவும் தனக்கு பெண் பார்க்குமாறு பெற்றோர்களிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. 

அத்துடன் சிம்பு, தனது பெற்றோர்களிடம் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் பார்க்கும் பெண் தனக்கு பிடிக்கவேண்டும். அதேநேரத்தில் அந்த பெண்ணுக்கும் தன்னை பிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அதனையடுத்து, அவர்களும் உடனடியாக சிம்புவுக்கு பொருத்தமான பெண்ணை தேட ஆரம்பித்துள்ளனராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .