George / 2016 ஜனவரி 19 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

தான் பட்ட கஷ்டங்களை புத்தகமாக எழுதுவதற்கு பொலிவூட் நடிகை கங்கனா ரணவத் தயாராகியுள்ளார். அண்மையில், தான் நடித்த குயின் திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற கங்கணா ரணவத் தற்போது பலத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில், தான் பட்ட கஷ்டங்களை புத்தகமாக எழுத நினைத்த கங்கணா, நடிப்பதற்கு வருவதற்கு முன்பு தான் சந்தித்த பிரச்சினைகள் அதை வெற்றி கொண்ட விதம், சினிமாவுக்கு வந்த 10 ஆண்டுகளில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் இவற்றை கொண்டு தனது சுயசரிதையை எழுதுகிறார்.
தற்போது நான் அடைந்திருக்கும் நிலை எனது தோல்விகளால் செதுக்கப்பட்டது. வெற்றிகள் எந்தப் பாடத்தையும் சொல்லித் தருவதில்லை. தோல்விகளே பாடம் சொல்லித் தருகிறன. அந்தப் பாடங்களை எழுத இருக்கிறேன். மற்றவர்கள் என்னை பற்றி எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. என்னை பற்றி நான் எப்படி நினைக்கிறேன் என்பதற்காக எழுதுகிறேன்' என்கிறார் கங்கணா ரணவத்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025