2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சொல்லாமல் சொல்லும் ஜனனி ஐயர்

George   / 2016 ஏப்ரல் 10 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக நடிகைகள் என்றாலே காதல் கிசுகிசுவில் சிக்காமல் தப்புவது இல்லை, ஜனனி ஐயரும் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார், இவர் வாரிசு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜனனி கூறியதாவது, 'சினிமா வட்டாரத்திலேயே எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை, யாருடனும் காதல் வயப்படவில்லை. 

உங்களிடம் நான் கேட்பது எல்லாம் தயவு செய்து இதுபோன்று செய்தி பரப்பாதீர்கள். இப்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில் மட்டுமே இருக்கிறது' என்றார்.

'என்னுடைய திருமணம் சரியான நேரம் வரும் கண்டிப்பாக நடக்கும், அதேசமயம் எனது திருமணம் வீட்டில் பார்த்து வைத்து செய்யும் திருமணமாக மட்டும் இருக்காது' என்றும் ஜனனி கூறியிருக்கிறார்.

இதன்மூலம், தான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் ஜனனி ஜயர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X