S.Renuka / 2026 ஜனவரி 11 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்' படத்தை பொங்கலுக்கு வெளியிட இநதிய உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ கடந்த 9ஆம் திகதி வெளியாக இருந்தது. தணிக்கை சான்றிதழ் காரணமாக வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், என்னால் எல்லாவற்றையும் பகிர முடியவில்லை.
கடந்த டிசெம்பர் 18ஆம் திகதி ‘ஜனநாயகன்’ தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதைக்குழு ஆய்வு செய்து, டிசெம்பர். 22 அன்று சில மாற்றங்களைப் பரிந்துரைத்தது. ‘யுஏ 16 பிளஸ்’ சான்றிதழ் வழங்கப்படும் என மெயில் மூலம் தெரிவித்தனர்.
பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பித்த போதும், சான்றிதழ் பெற முடியவில்லை.
ரிலீஸு-க்கு சில நாட்களே இருந்த நிலையில், ஜன.5ஆம் திகதி மாலை, ஒரு புகாரின் பேரில் மறு ஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
படத்தை ரிலீஸ் செய்ய மிகக் குறைந்த நாட்களே இருக்கும் போது, புகார் கொடுத்தவர் குறித்த தெளிவின்மை காரணமாக, உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.
ஜனவரி 6 மற்றும் 7ஆம் திகதிகளில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்துக்கு ‘யுஏ 16 பிளஸ்’ சான்றிதழை வழங்க உத்தரவிட்டது.
ஆனால், தணிக்கை வாரியம் உடனடியாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது.
இதன் விளைவாக, சான்றிதழ் வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்கிறேன்: இந்த சூழலில் ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் அனைவரிடத்திலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சில காரணங்களால் சொன்ன திகதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
கடந்த 33 ஆண்டுகளாக நடிகர் விஜய் தனது ரசிகர்களிடமிருந்து பெற்ற அன்பு, திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு ஓர் அற்புதமான பிரியா விடை அளிக்கப்பட வேண்டும். அதற்கு அவர் அனைத்து வகையிலும் தகுதியானவர். நீதித்துறை நடைமுறைகள் மீது நம்பிக்கை இருக்கிறது. விரைவில் படம் வெளியாகும்” என்று வெங்கட் நாராயணா கூறியுள்ளார்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக் காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேன்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நாளை திங்கட்கிழமை (12) அன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
11 Jan 2026