2025 மே 15, வியாழக்கிழமை

தணிக்கை குழுவுக்கு தணிக்கை

George   / 2016 ஜூன் 13 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரைப்படங்களை மக்கள் பார்க்கலாமா? வேண்டாமா? எந்த வயதினர் பார்க்கலாம் என்ற முடிவை எடுத்து அதற்கான சான்றிதழை வழங்கி வருவதுதான தணிக்கை குழுவின் பணியாகும்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய அரசு அதிகாரியும், மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரநிதிகளும் தணிக்கை குழுவில் இருக்கிறார்கள். 

அண்மைக்காலமாக தணிக்கை குழு என்பது சான்றிதழ் அளிக்கும் அமைப்பு என்பதையும் தாண்டி, திரைப்படங்களின் காட்சிகளை வெட்டுவது. திரைப்படத்துக்கு தடைவிதிப்பது என்ற தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தது. இப்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது.

போதை பொருட்களால் இளைய தலைமுறை எப்படி சீரழிகிறது என்பதை மையமாக வைத்து உட்தா பஞ்சாப் என்ற ஹிந்தி திரைப்படம் தணிக்கைக்கு சென்றபோது அந்தப் திரைப்படத்துக்கு 89 கட் கொடுத்து தணிக்கை குழு கின்னஸ் சாதனை படைத்தது. 

அதோடு திரைப்படத்தின் டைட்டிலையே மாற்ற வேண்டும் என்றது. இது ஹிந்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஒன்று திரண்டு ஹிந்தி நட்சத்திரங்கள் தணிக்கை குழுவின் அதிகாரத்தை குறைப்பதோடு நடைமுறையையே மாற்ற வேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'தணிக்கை குழு சான்றிதழ் மட்டுமே வழங்க வேண்டும் காட்சிகளை வெட்ட அதிகாரம் இல்லை' என்று தணிக்கை குழுவுக்கு கண்டனம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, தணிக்கை குழுவுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதனால், தணிக்கை குழு நடைமுறையை மாற்றி அமைக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, திரைப்படத்தின் காட்சிகளை வெட்டாமல் திரைப்படத்தின் தரத்துக்கு ஏற்ப சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது  யூ, ஏ, யூஏ என மூன்று வகையான சான்றிதழ்கள் உள்ளன. இந்நிலையில் இது போதாததால் மேலும் சில சான்றிதழ் வகைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .