Editorial / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காமரேட் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார்.
அப்போது மறைந்த நடிகைகைகள் ஸ்ரீதேவி, சவுந்தர்யா ஆகியோர் வாழ்க்கை கதை படங்களில் யாருடைய வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ராஷ்மிகா "ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது எனது கனவாக இருக்கிறது" என்று கூறினார்.
ஸ்ரீதேவி வாழ்க்கையை போனிகபூர் படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். ஸ்ரீதேவியாக நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது.
மேலும் ராஷ்மிகா அளித்த பேட்டியில், "நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன்.
தனியாக சந்தோஷமாக இருக்கும்போது இன்னொருவர் எதற்கு? தனியாக இருப்பதன் மூலம் நமக்கு வரப்போகிற காதலருக்கு என்ன மாதிரி குணநலன்கள் இருக்க வேண்டும் என்ற தெளிவும் நமக்கு வந்து விடும்.
எனக்கு காதல் வந்து விட்டது என்று யாருடனாவது இணைத்து பேசாதீர்கள்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .