2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தனுஷ் படத்தில் இணைந்த புதிய நாயகி

Mithuna   / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷ் நடித்து இயக்கி வரும் ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் ஆகியோர்களின் போஸ்டர்களை தனுஷ் வரிசையாக வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் இந்த படத்தில் நாயகிகளாக நடித்த துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி போஸ்டர்களையும் கடந்த இரண்டு நாட்களாக தனுஷ் வெளியிட்டார்.

இந் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளதாக கூறியுள்ள தனுஷ், அவருடைய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படம் தனுஷின் 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X