J.A. George / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தற்போது போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ’பையா 2’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் ஆர்யா மற்றும் ஜான்விகபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திவெளியானது. போனிகபூர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுவரை ஜான்வி கபூர் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் ஜான்வி கபூர் தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யான வதந்தி என்றும் அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் ’பையா 2’ படத்தில் நடிக்க ஜான்வி கபூர் நடிக்க இதுவரை ஒப்பந்தமாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பொலிவுட் திரையுலகில் பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் தொடர்ந்து இந்தி படங்களிலும் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
6 minute ago
48 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
48 minute ago
48 minute ago
2 hours ago