George / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

Black & White சினிமா 1
திருச்சியை சேர்ந்த சாமிகண்ணு வின்செண்ட்தான் தமிழ்நாட்டில் முதல் சினிமாவை திரையிட்டவர். சாமிக்கண்ணு, திருச்சி பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் வடிவமைப்பாளராக பணியாற்றினார்.
அப்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டுபாண்ட் என்பவர் சினிமா புரெஜெக்டரை வைத்து ஒவ்வொரு நாடாகச் சென்று திரைப்படம் காட்டிக் கொண்டிருந்தார். இலங்கையில் திரைப்படம் காட்டிவிட்டு திருச்சி வந்தார். வந்த இடத்தில் அவருக்கு உடல்நிலை மோசமானது.
புரெஜெக்டரை விற்று விட்டு நாடு திரும்ப நினைத்தார். சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த சாமிக்கண்ணு வின்செண்ட், அவரிடமிருந்த புரொஜக்டரை இந்திய ரூபாய் 2,250க்கு வாங்கினார். இது நடந்தது 1905ஆம் ஆண்டு. அன்றைய ரூபாயின் மதிப்பின்படி அது மிகப்பெரிய தொகை.
அதன் பிறகு திருச்சி ஜோசப் கல்லூரி அருகில் ஒரு டூரிங் கொட்டகை அமைத்து அதில் திரைப்படங்களை திரையிட ஆரம்பித்தார். அவர் திரையிட்ட முதல் திரைப்படம் 'லைப் ஒப் ஜீசஸ்' என்ற மௌனத் திரைப்படம். திரையரங்குக்கு மக்கள் வியப்போடு வந்து பார்த்துச் சென்றார்கள்.
1909ஆம் ஆண்டு சென்னை பாரீஸ் கோர்னரில் டெண்ட் கொட்டகை அமைத்து திரைப்படம் திரையிட்டார். அதுதான் சென்னையின் முதல் திரையரங்கு. பின்னர், கோவையில் 'வெரைட்டி' திரையரங்கத்தை நிறுவினார். இதுதான் முதல் நிரந்தர திரையரங்கம், தமிழ் சினிமாவின் தந்தை என்று சாமிக்கண்ணு வின்செண்டை குறிப்பிடுவார்கள்.
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago