2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தர்பார் படத்துக்கு தடை கேட்டு வழக்கு

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ‛தர்பார்'. 

தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம், லைகா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. 

அதாவது, 2.0 படத்தை தயாரித்த வகையில் மலேசிய நிறுவனத்திடம், லைகா 20 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து 23.70 கோடி ரூபாய் பணத்தை தர வேண்டும் என்றும், இல்லையேல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதற்கு பதில் அளிக்கும்படி லைகா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, வழக்கை ஜனவரி 02ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X