George / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மனஅழுத்தம் காரணமாக பிரியங்கா, 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பிரியங்காவிடம் மேனேஜராக இருந்த பிரகாஷ் ஜாஜூ என்பவர் டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ள இந்த தகவல் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பிரியங்காவுக்கு தவறான குறுந்தகவல்களை அனுப்பியதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரகாஷ் ஜாஜூ, 67 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, பிரியங்கா குறித்த சில விடயங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பிரகாஷ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
பிரகாஷ் ஜாஜூவின் சிறை அனுபவங்களை வைத்து 67 நாட்கள் என்ற திரைப்படத்தை எடுக்கப்போவதாக, பிரியங்காவின் முன்னாள் காதலர் அஸீம் மெர்ச்சன்ட் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தன்னுடைய சார்பில் நீதிமன்ற நோட்டிஸ் ஒன்றை பிரியங்கா, அஸீமிக்கு அனுப்பியிருந்தார்.
எனினும், இந்தத் திரைப்படம் விரைவில் உருவாகும் என்று பிரகாஷ் ஜாசு தெரிவித்துள்ளார். அண்மையில், டிவி நடிகை பிரதியுக்ஷா பெனர்ஜி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரியங்கா குறித்து பிரகாஷ் ஜாஜூ வெளியிட்டுள்ள தகவல் பொலிவூட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago