J.A. George / 2020 நவம்பர் 30 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை பாப்ரி கோஷ், தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாப்ரி கோஷ் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.
இதையடுத்து, அவருக்கு பெரிய வாய்ப்புகள் வரவில்லை. மற்ற மொழிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களில் நடித்தார். சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்திருந்தார்.
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் சின்னத்திரை தொடர்களிலும் கவனம் செலுத்தினர்.
இவரும் தொழிலதிபர் ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இவர்கள் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .