Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 09 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் என்பது ஒரு விளைாட்டு இதில் விட்டுக்கொடுப்பதற்கோ, செண்டிமெண்டுக்கோ இடமில்லை என்று கூறிய வனிதா இன்றைய நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் விட்டுக்கொடுத்தது முரண்பாடாக உள்ளது.
தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் வனிதா, தர்ஷன், லொஸ்லியா ஆகிய மூவரும் கலந்து கொள்கின்றனர். சேரன் வெளியேற்றப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்த வனிதா, இந்த டாஸ்க்கில் தான் விட்டுக்கொடுத்துவிடுவதாகவும், இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறி வெளியேறினார்.
அதேபோல் தர்ஷனும் விட்டுக்கொடுக்க லொஸ்லியா வெற்றி பெறுகிறார். ஆனால் இருவரும் விட்டுக்கொடுத்த வெற்றி எனக்கு தேவையில்லை என்று லொஸ்லியா கூறுகிறார்.
உண்மையில் இந்த டாஸ்க்கை வனிதா விட்டுக்கொடுக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை விட்டுக்கொடுக்க வேண்டும் என அவர் முடிவு செய்திருந்தால் இந்த டாஸ்க்கிலேயே அவர் கலந்து கொண்டிருக்க மாட்டார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் இரண்டு கைகளிலும் தண்ணீர் உள்ள பவுலை ஏந்த முடியாது என்பதை புரிந்து கொண்ட வனிதா, இனிமேலும் டாஸ்க்கை தொடரமுடியாது என்ற நிலை வந்தவுடன் டாஸ்க்கில் இருந்து விட்டுக்கொடுத்து விலகுவது போன்று அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்த விரும்பால், லொஸ்லியாவிடம் தோல்வி அடைய விரும்பாமல், வனிதா விட்டுக்கொடுக்கும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
போட்டியில் விட்டுக்கொடுக்க கூடாது என்ற அறிவுரையை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தான் தற்போது விட்டுக்கொடுத்தால் தான் விமர்சனம் செய்யப்படுவோம் என்று தெரிந்தும் வனிதா விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தர்ஷனால் இந்த டாஸ்க்கை சிறப்பாக செய்ய முடியும். அவர் வேண்டுமென்றேதான் லொஸ்லியாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .