Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 ஜூன் 02 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்ப பிரச்சினை காரணமாக சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அஞ்சலி இப்போது தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கன்னடத்தில் தர்ஷன் ஜோடியாக சக்ரவர்த்தி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு மைசூரில் தொடங்கியது. தர்ஷன், அஞ்சலி பாடல் காட்சியை முதலில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். முதல் நாள் படப்பிடிப்பில் பூஜை முடிந்து காட்சியை எடுப்பதற்காக இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், தர்ஷன் உள்ளிட்ட நடிகர்கள், தயாரிப்பாளர் என 100 பேர் வரை அஞ்சலிக்காக காத்திருந்தனர்.
பெங்களூருவிலிருந்து சாவகாசமாக புறப்பட்ட அஞ்சலி, 4 மணி நேரம் தாமதாமாக வந்தார். பொறுத்துப் பார்த்த தர்ஷன், படப்பிடிப்பிலிருந்து கிளம்பி விட்டார்.
தாமதமாக வந்த அஞ்சலியை தயாரிப்பாளரும், இயக்குநர்களும் கடிந்து கொண்டார்கள். இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனையடுத்து, அஞ்சலி அங்கிருந்து கோபமாக திரும்பிச் சென்று விட்டார். தற்போது சக்ரவர்த்தி திரைப்படத்திலிருந்து அஞ்சலியை நீக்கிவிட்டாகவும் அவருக்கு பதிலாக தீபா சன்னிதியை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பில் அஞ்சலியால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடம் பெற்றுத் தருமாறு தயாரிப்பாளர், கன்னட தயாரிப்பாளர் சங்கதில் புகார் செய்ய முடிவு செய்திருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago