2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

திருநங்கையாக விஜய் சேதுபதி: வைரலாகும் படங்கள்

George   / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஜினி, கமல், சரத்குமார், விஜய், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், சூரி என பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். இதில், கமல், சரத்குமார், சிவகார்த்திகேயன் ஆகியோர், திரைப்படம் முழுவதும் வரக்கூடிய பெண் வேடங்களில் நடித்துள்ளனர்.

அப்படி அவர்கள் நடித்த அந்த திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் கமலின் “அவ்வை சண்முகி”, சரத்குமார் நடித்த “காஞ்சனா”, சிவகார்த்திகேயன் நடித்த “ரெமோ”ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

இந்நிலையில், “ஆரண்ய காண்டம்” திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தில் விஜயசேதுபதியும் பெண் வேடத்தில் நடிக்கிறார். “ஆரண்ய காண்டம்” திரைப்படம் போன்றே வித்தியாசமான கதையில் உருவாகும் இந்த திரைப்படத்தில் தற்போது விஜயசேதுபதி, பெண் வேடத்தில் நடிக்கும் புகைப் படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறன. சிவகார்த்திகேயனைப்போன்று விஜயசேதுபதியும் அடுத்த லெவலுக்கு போய்க்கொண்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X