George / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்களிடம் தவறாக நடக்க முயலும் ஆண்களை பார்த்து பெண்கள் அஞ்சி அலறக்கூடாது. அவர்களை திருப்பி அடிக்க வேண்டும். அப்படி செய்தால் பயந்து ஓடி விடுவார்கள் என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடத்த நிகழ்சியொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
'ஆண், பெண்களை பிரித்து பார்க்க கூடாது. இருவருக்கும் சம உரிமை இருக்கிறது. இன்றைய உலகமும் அதை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. பெண்கள் ஆடை உடுத்துவதை வைத்து அவர்களை மதிப்பீடு செய்வது தவறு. பெண்கள் எந்த மாதிரி ஆடைகளை அணிய விரும்புகிறார்களோ அதை அணிந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ஆடையை வைத்துத்தான் பெண்களுக்கு மரியாதை என்ற நிலைமை இருக்கக்கூடாது. பெண்கள் எந்த துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் நடிகையாகவும் இருக்கலாம். ஆடைகள் அணிவதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் உடுத்தும் ஆடைகளின் நீளத்தை வைத்து மரியாதை அளிப்பது ஏற்புடையது அல்ல.
எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. ஆண்களின் தொல்லைக்கு ஆளாகிறார்கள். தவறாக நடக்க முயலும் ஆண்களை பார்த்து பெண்கள் அஞ்சி அலறக்கூடாது. அவர்களை திருப்பி அடிக்க வேண்டும். அப்படி செய்தால் பயந்து ஓடி விடுவார்கள்.
ஆண்கள் போல் பெண்களும் தனது சொந்த காலில் நிற்க வேண்டும். முன்பெல்லாம் தொழில் நிறுவனங்களில் பெண்களை பார்க்க முடியாது. ஆனால் இப்போது வேலை பார்க்கும் பெண்களை அதிகம் பார்க்க முடிகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது' என வித்யா பாலன் மேலும் கூறியுள்ளார்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025