Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மார்ச் 18 , மு.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை த்ரிஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. கௌரவக் கொலைகள் தொடங்கி மனிதர்களுக்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டார் த்ரிஷா. அதே நேரம் ஆடு, மாடு, நாய், குதிரை போன்ற ஜீவராசிகளுக்கு ஏதாவது என்றால் உடனே டுவிட்டரில் பொங்குவார்.
சில தினங்களுக்கு முன் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி என்பவர், ஒரு குதிரையை தாக்கினார். இதனால் அந்தக்குதிரையின் கால் முறிந்தது.
அந்தக் குதிரையினால் இனி சொந்த காலில் நிற்பது கடினம் என்றும், அந்தக்குதிரைக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
அடிபட்ட குதிரை நிலை குலைந்து கீழே விழுந்து கிடப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின.
அதைப் பார்த்த த்ரிஷா, 'மிகவும் வெட்கக்கேடான செய்கை. நீங்கள் நரகத்துக்குச் செல்ல நான் இறைவனை வேண்டுகிறேன்' என்று மிகவும் கோபமாக கருத்து தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட காரணமாக விலங்குகள் நல அமைப்பினா பீட்டாவின் விளம்பர தூதராக இருப்பவர் த்ரிஷா. தெரு நாய்களுக்காக பல்வேறு பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
குதிரை தாக்குதல் சம்பவத்தை வைத்து பாஜக எம்.எல்.ஏ.வை டுவிட்டரில் கடுமையாக சாடியதும் நடிகை த்ரிஷாவுக்கு சம்மந்தப்பட்ட கட்சியிலிருந்து மிரட்டல்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை த்ரிஷா உறுதிப்படுத்தவில்லை, மௌனமாகவே இருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
8 hours ago