Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 செப்டெம்பர் 05 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர். 'லேசா லேசா' திரைப்படத்தில் நாயகியான இவர், அதையடுத்து 'மௌனம் பேசியதே' திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
பின்னர் விஜய், அஜீத், விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த த்ரிஷா, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கோலேச்சி வருகிறார். மேலும், தற்போது சில திரைப்படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். அதனால் த்ரிஷாவுக்கென்று ஓர் ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தனுஷுடன் 'கொடி' திரைப்படத்தில் இணைந்த த்ரிஷா, இதுவரை இல்லாத ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அடுத்தபடியாக, தமிழ் சினிமாவில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஒரு பெரிய கனவு அவருக்கு இருந்து கொண்டிருப்பதால், ரஜினியின் அடுத்த திரைப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார் என்றதும் அந்த திரைப்படத்தில் தான் நடிப்பதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறாராம் த்ரிஷா.
அதுகுறித்து, அத்திரைப்படத்தை இயக்கவுள்ள 'கபாலி' இயக்குநர் ரஞ்சித்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டாராம் த்ரிஷா. அதனால், ரஜினியின் புதிய திரைப்படத்தில் த்ரிஷா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago