George / 2016 செப்டெம்பர் 05 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும்; 'ரெமோ' திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வெளியான அத்திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தளத்தில் தெறித்து வருகின்றன.
ஏற்கெனவே, அனிருத் இசையமைப்பில் உருவான பாடல்களான 'ரெமோ நீ காதலன்', 'செஞ்சிட்டாளே', 'சிரிக்காதே' ஆகிய பாடல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டன.
இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து 'ரெமோ' திரைப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்றைய தினம் 'ரெமோ' திரைப்படத்தின் ஏனைய பாடல்கள் வெளியாகின.
அதன்படி, நள்ளிரவு 12 மணியளவில் அனைத்து பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அனைத்து பாடல்களும் இணையதளங்களில் ஒலிக்கத் தொடங்கின.
முன்னதாக வெளியான பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு தற்போது மற்றைய பாடல்களும் கிடைத்துள்ளது. இதனால் திரைப்படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
'ரெமோ' திரைப்படம், ஒக்டோபர் 7ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
17 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
19 minute ago