2025 மே 16, வெள்ளிக்கிழமை

தெறி படப்பிடிப்பு நிறைவு

George   / 2016 ஜனவரி 18 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளையதளபதி விஜயின் 59ஆவது திரைப்படமான தெறியின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டதை திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஜோர்ஜ் சி.வில்லியம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். 

தெறி படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி வெளிநாடுகளிலும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போதுதான் முடிவடைந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாத விடுமுறையில் திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

போக்கிரி, ஜில்லா ஆகியத் திரைப்படங்களுக்கு பிறகு விஜய் பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் மூன்றாவது  திரைப்படம் தெறி என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .