2025 மே 16, வெள்ளிக்கிழமை

நகைச்சுவை நடிகர் செல்வகுமார் விபத்தில் மரணம்

George   / 2016 மார்ச் 12 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகைச்சுவை நடிகர் செல்வகுமார், வீதி விபத்தில் காயமடைந்து மரணமடைந்துள்ளார். ரமணா, அந்நியன், அலெக்ஸ் பாண்டியன், பூலோகம் ஆகிய திரைப்படங்களில் பெரிய கேரக்டர்களில் நடித்ததுடன் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கோவை அருகே உள்ள துடியலூரைச் சேர்ந்த செல்வகுமார், சென்னை தி.நகர் சீனிவாச தெருவில் மனைவி கீதா, மகள்கள் ரோகிணி, கார்த்திகாக ஆகியோருடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் செல்வகுமார், தனது நண்பர் கோவை செந்திலுடன் பர்கிட் ரோட்டில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் இருவரும் தடுமாறி வீதியில் விழுந்தனர். 

இதில் செல்வகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு செல்வகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 58. கோவை செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். 

செல்வகுமாரின் இறுதி சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரில் நடக்கிறன. செல்வகுமார் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .