2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நடிகை காஜல் அகர்வால் மாலைதீவில் தேனிலவு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 10 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில் திருமணமான நடிகை காஜல் அகர்வால் மாலைதீவில் தேனிலவைக் கொண்டாடி வருகிறார்.  

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் - படம் பாரிஸ் பாரிஸ்.

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பொலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியா கும் எனத் தெரிகிறது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்தார் காஜல் அகர்வால். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X