J.A. George / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 9-ம் திகதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனியார் ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சித்ராவும், ஹேம்நாத்தும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
சித்ரா படப்பிடிப்பில் இருந்தபோது, ஹேம்நாத் குடித்துவிட்டு அடிக்கடி சென்று தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சித்ராவின் தாயாரும் ஹேம்நாத்தை விட்டுப் பிரிந்து வரும்படி அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். சித்ராவின் மரணத்துக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாய் விஜயா உட்பட பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் ஹேம்நாத்தை நசரத்பேட்டை பொலிஸார் நேற்று (14) இரவு கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .