Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2016 ஜூலை 14 , மு.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் கமல்ஹாசன், மாடிபடியிலிருந்து தவறி விழுந்ததில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சபாஷ் நாயுடு திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிந்து, சில தினங்களுக்கு முன்னர் தான் அமெரிக்காவிலிருந்து கமல், சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில், கமல்ஹாசன் தன் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தின் மாடிபடியிலிருந்து தவறி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கமலை பரிசோதித்த டொக்டர்கள், கமலுக்கு கால் மூட்டு மற்றும் முதுகு தண்டுவடம் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளனர். இதனையடுத்து கமலுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
தற்போது கமல் நலமாக இருக்கிறார். இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் பூரணமாக குணமடைந்து விடுவார் என்றும், அதன்பின்னர் அவர் வழக்கம் போல தனது படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்றும் டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கமல் அடிபட்டு வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி அறிந்த திரைபிரபலங்கள் பலர், அவரை சந்திக்க வைத்தியசாலை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
18 minute ago
25 minute ago