2025 மே 16, வெள்ளிக்கிழமை

நடிகராக களமிறங்குகிறார் விஷாலின் தந்தை

George   / 2016 ஜூன் 22 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஷாலின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி, இப்போது தமிழ் திரைப்படங்களில் நடிக்கயிருக்கவுள்ளார்.

தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான ரக்ஷாசியில் ராதாரவி நடித்த வேடத்தில் ஜி.கே.ரெட்டி நடித்திருந்தார்.

இந்நிலையில், புதுமுக இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன், நிவின் பாலியை வைத்து இயக்கும் திரைப்படத்திலேயே ஜி.கே.ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

தற்போது இத் திரைப்படத்தின்; படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .