2025 ஒக்டோபர் 13, திங்கட்கிழமை

“நான் ஒரு தமிழச்சி’’: பேட் கேர்ள் பட நடிகை

Editorial   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரித்த "பேட் கேர்ள்" திரைப்படத்தில் நடித்த நடிகை அஞ்சலி சிவராமன், தன்னை மலையாளி என்று கூறி இணையத்தில் டிரோல் செய்த ஒருவருக்கு பதிலளித்துள்ளார்.

அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு வீடியோவில், இந்த சம்பவத்தை நேரடியாகக் குறிப்பிட்டு, “நான் ஒரு தமிழச்சி. என் பெயர் அஞ்சலி சிவராமன். நீங்கள் கூகுளில் தேடினால் கூட நான் தமிழச்சி என்பது தெரிந்துவிடும். என் அம்மா சித்ரா அவர் தமிழர். என் அப்பா வினோத் சிவராமன், அவரும் தமிழர். என் முழு குடும்பமும் தமிழர்கள். ஆமாம், எனக்கு உண்மையில் தமிழ் பேசத் தெரியாது, ஆனால் எனக்கு அது புரியும்என்றார்.

2018 ஆம் ஆண்டு வெளியான பி.எம். செல்பிவாலி என்ற வெப் தொடருடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அஞ்சலி, பின்னர் கோபால்ட் புளூவில் நடித்தார் , மேலும் ஸ்பானிஷ் வெற்றிப் படமான எலைட்டை தழுவி எடுக்கப்பட்ட நெட்பிளிக்ஸின் கிளாஸ் (2023) திரைப்படத்தில் நடித்து அங்கீகாரத்தைப் பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X