Janu / 2026 மே 21 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாலிவுட் நடிகையான ரியா சக்ரவர்த்தி, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இணையத்தில் நேரத்தைச் செலவிடுவதை விட, நிஜ வாழ்க்கையின் தருணங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில்,
"சமீபகாலமாக நான் என்னையே இழந்து தவிக்கிறேன். சமூக வலைத்தளங்கள் இப்போது ஒரு பாரமாகத் தோன்றுகின்றன. ஒரு தருணத்தைப் புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுக்க வேண்டும் என்று நினைக்காமல், அந்தத் தருணத்தில் நிஜமாக வாழ்வதை நான் இழக்கிறேன். அமைதியை இழக்கிறேன். சாதாரணமாக இருப்பதை மிஸ் இழக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறிது காலம் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி இருக்கப் போவதாகவும் ரியா கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப் பிறகு, ரியா சக்ரவர்த்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்ட ஒரு நபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.


29 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago