S.Renuka / 2026 ஜனவரி 01 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

'டாக்ஸிக்’ படத்தில் இருந்து நயன்தாராவின் லுக் உடன் கூடிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்ஸிக்’. கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பின் வெளியாகும் யஷ் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மார்ச் 19ஆம் திகதி இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது ‘டாக்ஸிக்’ படத்திலிருந்து நயன்தாராவின் லுக் மற்றும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் கங்கா என்னும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்ததில்லை என்கிறது படக்குழு. மேலும், இப்படத்தில் அவருடைய நடிப்பே ஒரு வலுவான அடையாளமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நயன்தாரா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ், “நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் ’டாக்ஸிக்’ படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்,” என தெரிவித்துள்ளார்.
இதில் கியாரா அத்வானி, ஹூமா குரோஷி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக ராஜீவ் ரவி, இசையமைப்பாளராக ரவி பஸ்ரூ, எடிட்டராக உஜ்வல் குல்கர்னி, சண்டைக் காட்சிகளின் இயக்குநர்களாக ஜே.ஜே.பெர்ரி, அன்பறிவ், கெச்சா காம்பக்டி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
32 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago