Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்தியத் திரையுலகத்தில், ஒரு நாயகி இவ்வளவு சம்பவளம் வாங்குவாரா என்று, ஏற்கெனவே வியக்க வைத்தவர் நயன்தாரா. தற்போது மீண்டும் அவருடைய சம்பளத்தை உயர்த்தி, அவருடைய அடுத்த அதிரடியை ஏற்படுத்தியிருக்கிறார்.
நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த மாதக் கடைசியில் 'இமைக்கா நொடிகள்' படம் வெளியாக உள்ளது. தற்போது நயன்தாரா தமிழில். 'விஸ்வாசம், கொலையுதிர் காலம், சிவகார்த்திகேயன் படம் எனச் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மலையாளத்திலும் தலா ஒவ்வொரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நயன்தாரா அவருடைய சம்பளத்தை, மீண்டும் அதிரடியாக உயர்த்திவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய சம்பளம், தற்போது 4 கோடி இந்திய ரூபாயென்று வியக்கவும் திகைக்கவும் வைக்கிறது. அந்தத் தொகையைக் கொடுத்து அவரை நடிக்க வைக்கவும், சில தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களாம்.
ஆனால், நயன்தாரா நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதால், பலருக்கும் அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பெரிய நடிகர்கள் கூட, நயன்தாராவுக்காகக் காத்திருந்து அவர்களது படங்களின் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள் என்பது கூடுதல் தகவல்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
2 hours ago