2025 மே 14, புதன்கிழமை

நயன்தாரா வில்லனாக கௌதம் மேனன்

George   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

.டிமாண்டி காலனி. திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கததில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோவாக அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார்.

நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். நயன்தாரா இ பொலிஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் இன்னொரு கதாநாயகியும் இருப்பதாக திரைப்படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து உத்தியோகப்பூர்வமான செய்தி இன்னும் வரவில்லை.

இந்த திரைப்படத்துக்கு 'இமைக்கா நொடிகள்' என்று தலைப்பு வைத்துள்ளார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜெயக்குமார் தயாரித்து வருகிறார். இது இந்நிறுவனம் தயாரிக்கும் 3ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .