Gavitha / 2016 ஜூலை 04 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பில்லா படம் வந்த நேரத்தில் கவர்ச்சி புயலாக இருந்து வந்த நயன்தாரா, சினி உலகில் ஒரு புயலாக உலாவந்துகொண்டிருக்கின்றார். குறிப்பாக, தனி ஒருவன் படத்துக்குப் பிறகு மாயா படத்தில் கதையின் நாயகியாக நடித்த நயன்தாரா, தற்போது சற்குணம் தயாரிக்கும் டிக் டிக் டிக் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதேசமயம், விக்ரம், கார்த்தி உள்ளிட்ட சில பிரபல ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது ஒரு புதிய கண்டிசனை போட்டு வருகிறார். அதாவது, நானும் ரௌடிதான் படத்தில் விஜயசேதுபதிதான் ஹீரோ என்றாலும், அந்தப் படத்தின் கதை என்னை மையப்படுத்திதான் இருந்தது. அதனால், ஜூனியர் நடிகர்களுடன் நான் ஜோடி சேர வேண்டும் என்றால் என்னை மையப்படுத்தும் கதைகளாக இருக்க வேண்டும் என்கிறார். இதனால் இளவட்ட நடிகர்களுடன் நடிப்பதற்காக நயன்தாராவிடம் பேசிக்கொண்டிருக்கும் இயக்குநர்கள், இப்போது அவரை முன்னிறுத்தி கதையில் திருத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவின் இந்த முடிவினால் இளவட்ட நடிகர்கள், நாம் டம்மி ஹீரோவாகி விடுவோமோ என்று அதிருப்தியில் உள்ளனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago