2025 மே 08, வியாழக்கிழமை

நாடோடிகள் கோபாலகிருஷ்ணன் காலமானார்

Editorial   / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்திர நடிகர் கே.கே.பி. கோபாலகிருஷ்ணன் இன்று (05) தனது 54ஆவது வயதில் காலமானார். 

2009ஆம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த நாடோடிகள் படத்தில் நடிகை அனன்யாவின் தந்தையாக, சசிகுமார் - அனன்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் கோபாலகிருஷ்ணன்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கோபாலகிருஷ்ணனின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X