2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நாமினேஷனுக்கு தெரிவான 4 போட்டியாளர்கள்.. முதல் ப்ரமோ வெளியானது

J.A. George   / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் நான்காவது சீசன் முதல் நாளில் இருந்தே மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. 

போட்டியாளர்கள் நடுவில் கருத்து வேறுபாடும் அதிகம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு நேற்று அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் இடையே நடந்த பெரிய வாக்குவாதம் ஒரு உதாரணம்.

அது மட்டுமன்றி நேற்று போட்டியாளர்களுக்கு ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் அவர்கள் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியானவர்களா என்பதை கூற அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி பேச வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி அனைவரும் அவரவர் கதைகளை கூறினர். 

பாடகர் வேல்முருகன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் பேசுவதைக் கேட்டு மற்ற போட்டியாளர்கள் கண்ணீரில் மூழ்கினார்கள். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் மற்றும் அவமானங்கள் பற்றி பேசி இருந்தார்கள்.

தற்போது மூன்றாவது நாளுக்கான முதல் ப்ரொமோ வீடியோ வெளிவந்திருக்கிறது. அதில் கடந்து வந்த பாதையின் டாஸ்க் முடிவில் போட்டியாளர்கள் அனைவரும் பேசி அடுத்த வாரம் நாமினேஷனுக்கு தேர்வாகும் நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என இன்று பிக் பாஸ் கேட்கிறார்.

அப்போது பாலாஜி முருகதாஸ் அனைவர் முன்னிலையிலும் நின்று, “சனம் ஷெட்டி விபத்து ஏற்பட்டு 14 மாதங்களுக்குப் பிறகு தான் எழுந்து உட்கார்ந்தார்,
ஆனாலும் ஆரியன் கதை அதிகம் Inspiring ஆக இருந்தது. 10 பேர் அதைக் கேட்டால் 10 பேருக்கும் சாதிக்க வேண்டும் என அவர்களுக்குத் தோன்றும்” என கூறி நான்கு போட்டியாளர்களை நாமினேஷனுக்கு தேர்வு செய்கிறார்.

சனம் ஷெட்டி, கேப்ரியலா, ரேகா மற்றும் சம்யுக்தா ஆகியோர் பெயர்களை தான் முருகதாஸ் தேர்வு செய்கிறார்.

அதற்கு பிறகு அவர்கள் 4 பேரும் தான் அடுத்து வார Eviction processல் நாமினேட் செய்ய தேர்வான முதல் 4 நபர்கள் என பிக் பாஸ் அறிவிக்கிறார். 

அதை கேட்டு அந்த நான்கு போட்டியாளர்களும் சற்று அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள்.

இந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் எலிமினேட் செய்யப்படமாட்டார்கள் என கமல்ஹாசன் முன்பே அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X