2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நீங்கள் எல்லாம் முட்டாள்கள்: சோனாக்‌ஷியின் கோபம்

Editorial   / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா குறித்த அச்சத்தால் தங்கள் செல்லப் பிராணிகளை வீட்டை விட்டு விரட்டுபவர்கள் முட்டாள்கள் என்று நடிகை சோனாக்‌ஷி சின்ஹா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா குறித்த பீதி ஒருபுறம் என்றால், மறுபுறம் வைரஸ் தொடர்பான ஏராளமான வதந்திகளும் சமூக வலைதளங்களில் வலம் வந்து மக்களைக் குழப்புகின்றன. 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் எது உண்மை, எது பொய் என்று பயத்தில் இருக்கும் மக்களால் ஆராய்ந்து தெளிவதற்கும் முறையாக இயலவில்லை.

அந்த வகையில், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மூலம் வைரஸ் பரவுவதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. 

அந்தச் செய்தியை வலுப்படுத்தும் விதமாக நியூயார்க் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும், வேறு சில மிருகங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தகவல்களால் அச்சமடைந்த பலரும் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கியது. 

இந்த நிலையில் பிரபல நடிகை சோனாக்‌ஷி சின்ஹா இதற்கு கண்டனம் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "வளர்ப்பு பிராணிகளால் வைரஸ் பரவுகிறது என்ற தகவலை நம்பி தங்கள் நாய், பூனைகளை வீட்டை விட்டு சிலர் துரத்துவதாக சில செய்திகளை நான் பார்த்தேன். 

உங்களிடம் நான் ஒன்றும் கூற வேண்டும். நீங்கள் முட்டாள்கள். நீங்கள் விரட்ட வேண்டியது உங்கள் அறியாமையையும் மனிதநேயமற்ற தன்மையும் தான். நாய்களால் கொரோனா பரவாது. விலங்குகளிடம் அன்பாக இருங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X