George / 2016 ஜூன் 05 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் அறிமுகமான பூனம் பாஜ்வா, அதன்பிறகு கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக தொடர்ந்தார்.
சில வருடங்கள் இடைவெளிக்குப்பிறகு ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் திரைப்படத்தில் ஒரு கவர்ச்சிகரமான ரோலில் நடித்த பூனம், சுந்தர்.சியின் அரண்மனை2 விலும் கவர்ச்சி ரோலை தொடர்ந்தார்.
தற்போது அதே சுந்தர்.சி நடித்துள்ள முத்தின கத்திரிக்காய் திரைப்படத்திலும் கவர்ச்சிகரமான வேடத்தில்தான் நடித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான வெள்ளிமூங்கா திரைப்படத்தின் ரீமேக்கான இதில் கதாநாயகி வேடம்தான் என்றாலும், கவர்ச்சி நடிகைகள் போன்று கிளுகிளுப் பான ரோலில் நடித்திருக்கிறாராம் பூனம்பாஜ்வா.
அதேசமயம், இந்த திரைப்படத்தின் தலைப்பின் பொருள் தெரியாமல் இருந்த பூனம்பாஜ்வா திரைப்படக்குழுவினரிடம் கேட்டாராம். அப்போதுதான் தன்னை முத்தின கத்திரிக்காயாக காட்டுகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
அதையடுத்து, ரொம்பவே பீல் பண்ணிய பூனம் பாஜ்வா, 32 வயதை தாண்டிய நடிகைகள்கூட இளமையான வேடங்களில் நடித்து வரும்போது 27 வயதான நான் முத்தின வேடங்களில் நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்கிறேனே என்று பீல் பண்ணினாராம்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago