Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 நவம்பர் 16 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
படையப்பா நீலாம்பரி மாதிரி ஒரு வில்லி வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை. நாயகி திரைப்படத்தின் ஊடாக நிறைவேறுகிறது என்கிறார் நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
இயக்குநர் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படத்தில், த்ரிஷா வில்லியாக நடிக்கிறார்.
இது பற்றி த்ரிஷா கூறுகையில், நடிக்க வந்து 10 வருடங்களுக்கு அதிகமாகிவிட்டது. பெரும்பாலும் ஹீரோவுடன் டூயட் பாடும் கமர்ஷியல் ஹீரோயினாகத்தான் நடித்துள்ளேன். அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் திரைப்படங்களில் வித்தியாசமாக நடித்திருக்கிறேன். இனி இதுபோன்று வித்தியாசமானத் திரைப்படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன் எனது திறமையை வெளிப்படுத்துகிற மாதிரியான வேடங்களில் தான் இனி நடிப்பேன்.
அரண்மணை 2ல் வித்தியாசமான த்ரிஷாவை பார்க்கலாம். நாயகி திரைப்படத்தில் 80களில் இருந்த ஒரு நடிகையாக நடிக்கிறேன். படையப்பா நீலாம்பரி மாதிரி ஒரு வில்லி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறுகிறது என்கிறார் த்ரிஷா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025