Editorial / 2025 நவம்பர் 11 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் தமிழில் நான்காவது சீசனில் வந்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சமியுக்தா. பிக் பாஸ்க்கு பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் பல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் சமியுக்தா, இரண்டாவது திருமணமாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகனும் சிஎஸ்கே வின் முன்னாள் வீரருமான அனிருத்தா ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் தமிழில் நான்காவது சீசனில் வந்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சமியுக்தா. பிக் பாஸ்க்கு பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் பல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் சமியுக்தா, இரண்டாவது திருமணம் ஆக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் மகனும் சிஎஸ்கே வின் முன்னாள் வீரருமான அனிருத்தா ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு அவருக்கு பல முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் தமிழ் சினிமாவில் கிடைத்தது. காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் சமியுக்தா நடித்தார். சமியுக்தா குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதே போன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகனான அனிருத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கின்றார். அதன் பின் கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரியும் அனிருத்தா, கடந்த 2012 ஆம் ஆண்டு ஆர்த்தி வெங்கடேஷ் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
எனினும் இருவரும் விவாகரத்து செய்த நிலையில் தற்போது சமியுக்தாவுடன் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் தீபாவளி அன்று இருவரும் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு ஒன்றாக பண்டிகையை கொண்டாடிய போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய கொள்ள உள்ளதாகவும், இதற்காக சமியுக்தா திருமண வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.நீங்கள் அனிருத்தாவுடன் திருமணம் செய்ய போகிறீர்களா என்று கேள்வி கேட்டதற்கு, அனைத்தும் சமூக வலைத்தளத்தில் இருக்கின்றது. எங்களுக்குள் என்ன இருக்க வேண்டுமோ அது இருக்கிறது என்று பதில் அளித்து இருக்கின்றார். சமியுக்தாவுக்கு ரயான் என்ற ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 minute ago
15 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
24 minute ago