George / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மணமகளே மருமகளே வா வா... உன் வலது காலை எடுத்து வைத்து வா...' என இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியதாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இதனை எழுதியது யார் தெரியுமா? அவர்தான் பஞ்சு அருணாசலம். அதுவும், திடீர் பாடலாசிரியராகி எழுதிய முதல் பாடல்.
1962ஆம் ஆண்டு வெளியான 'சாரதா' திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ் நடித்திருந்தனர். கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை அறிவித்த பிறகு திரைப்படத்தில் இடம்பெறும் திருமண காட்சியில் ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நினைத்தார்.
கே.வி.மகாதேவன் டியூனை போட்டுவிட்டார். கண்ணதாசனை தேடினார்கள். அவர் வெளியூரில் இருந்தார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது கண்ணதாசனின் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலம் கண்ணதாசனின் 'தென்றல்' பத்திரிக்கையில் அவ்வப்போது கவிதைகள் எழுதி வந்தார்.
கண்ணதாசனின் பாடல்களை இசையமைப்பாளர்களிடம் கொடுப்பதும் அதற்கான பணத்தை வாங்கி வருவதும் பஞ்சு அருணாசலத்தின் வேலை. அப்படி பணம் வாங்க வந்த பஞ்சு அருணாசலத்தை உட்கார வைத்து கே.எஸ்.கோபால கிருஷ்ணன் 'பஞ்சு நீதான் கவிதையெல்லாம் எழுதுறியே இந்த மெட்டுக்கு ஒரு பாட்டு எழுது' என்றார். பஞ்சு பயந்தார். 'கவிஞர்(கண்ணதாசன்) கோவிச்சுக்குவாரே' என்றார். 'கவிஞரை நாங்க சமாளிச்சுக்கிறோம் நீ எழுது' என்றார். அந்த பாடல்தான் 'மணமகளே மருமகளே வா' பாடல்.
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago