2025 ஜூலை 02, புதன்கிழமை

பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா திடீர் உயிரிழப்பு ஏன்?

Editorial   / 2025 ஜூலை 01 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு மும்​பை​யில் உள்ள தனது வீட்​டில் இறந்து கிடந்​தார். அவர் மாரடைப்​பால் இறந்​த​தாக குடும்​பத்​தினர் தெரிவிக்​கின்​றனர். எனினும் இறப்​புக்​கான காரணம் இன்​னும் உறுதி செய்​யப்​பட​வில்​லை.

இதுகுறித்து பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை ஒன்​றின் இதயநோய் மருத்​து​வர் திரேந்​திர சிங்​கானியா கூறிய​தாவது: மாரடைப்பு அபா​யத்​திற்கு ஸ்டீ​ராய்​டு​கள், தூக்​கமின்மை மற்​றும் ஹார்​மோன் சிகிச்​சைகள் (குறிப்​பாக பெண்​களுக்​கு) காரணங்​களாக உள்ளன. பிரபல​மாக இருந்​தா​லும் சரி, சாதாரண மனித​ராக இருந்​தா​லும் சரி, அனை​வரும் உடலுக்​கான விதி​களைப் பின்​பற்​ற​வில்லை என்​றால், அவர்​களுக்​குப் பிரச்​சினை​கள் ஏற்​படும்.

பிரபலங்​கள் அனை​வரும் தங்​கள் உடலை கட்​டுக்​கோப்​புடன் வைத்​திருக்க முயற்சி செய்​கின்​றனர். பல நேரங்​களில், அதை அடைவதற்கு அவர்​கள் என்ன செய்​கிறார்​கள் என்​பது நமக்​குத் தெரிவ​தில்​லை.

தூக்​கமின்​மை, இதய ஆபத்​துக்​கான காரணி​யாக அறியப்​படு​கிறது. பல பிரபலங்​கள் சில நேரங்​களில் இரவு முழு​வதும் விழித்​திருக்​கின்​றனர். ஸ்டீ​ராய்​டு​கள், ஓவர் டோஸ் மருந்​துகள், மாத​வி​டாய் நிறுத்​தத்​திற்​கான சிகிச்சை உள்​ளிட்ட ஹார்​மோன் சிகிச்​சைகள் போன்​றவை பெண்​களுக்கு மாரடைப்பு அபா​யத்தை ஏற்​படுத்​தக் கூடும்.

மன அழுத்​தம், சமூக ஊடகத்​தில் அடிமை​யாகி கிடத்​தல் ஆகிய​வை​யும் அதிக ரத்த அழுத்​தம், கார்​டிசோல் ஹார்​மோன் அளவு அதி​கரிப்பு ஆகிய​வற்​றுக்கு காரண​மாக உள்​ளன. இது இறு​தி​யில் இதய நோய்​களுக்கு வழி​வகுக்​கின்​றன.

புகைப்​பிடித்​தல் மற்​றும் மது அருந்​தும் பழக்​கம் இல்​லாதவர்​களும் மாரடைப்​புக்கு ஆளாகின்​றனர். இளமை தோற்​றத்​துக்​கான சிகிச்​சைகள் கடுமை​யான பக்க விளைவு​களை ஏற்​படுத்​தாது. ஆனால் ஏதேனும் ஹார்​மோன்​ சிகிச்​சை​யும்​ ஷெபாலி ஜரி​வாலா எடுத்​துக்​ கொண்​டிருந்​​தால்​ அது சில பக்​க விளைவு​களை ஏற்​படுத்​தி​யிருக்​கலாம்​. இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .