Freelancer / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பல இரசிகர்களால் கவரப்பட்டவர் ஏ.சகுந்தலா. இவர் கடந்த 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த 'சிஐடி சங்கர்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானதால், அவர் பின்னர் ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சகுந்தலா, சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி மூவரும் நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தன் நடன திறமையை வெளிப்படுத்தினார். இந்த வாய்ப்புகள் அவர் திரைப்பட உலகில் நுழைய வழிவகுத்தன.
அதன்பின்னர், 'படிக்காத மேதை', 'கை கொடுத்த தெய்வம்', 'திருடன்', 'தவப்புதல்வன்', 'வசந்த மாளிகை', 'நீதி', 'பாரத விலாஸ்', 'ராஜராஜ சோழன்', 'பொன்னூஞ்சல்', 'என் அண்ணன்', 'இதயவீணை' உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
திரையுலகில் இருந்து விலகிய பிறகு, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இரசிகர்களின் அன்பை பெற்றார். காலப்போக்கில், வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகளுடன் தங்கியிருந்த அவர், நேற்று திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சிஐடி சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகத்தின் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.S
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025