Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஒக்டோபர் 05 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 3 சீசன்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர் ரசிகர்கள்.
கொரோனா காரணமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது.
கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிக்பாஸ் வீட்டிற்காக படுக்கையறை கிட்சன், டைனிங் டேபிள், லிவிங் ஏரியா என ஆடம்பரமாக செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 105 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் திரைத்துறையுடன் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவே போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெறுகிறது.
முதற்கட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள கமல்ஹாசன், வீட்டின் ஒவ்வொரு ஏரியாவையும் சுற்றிக் காண்பித்து வருகிறார். ரொம்பவே ஆடம்பரமாக உள்ளது பிக்பாஸ் வீடு. தொடர்ந்து கொரோனா வாரியர்ஸுடன் பேசிய கமல் முதல் போட்டியாளரான ரியோவை அறிமுகம் செய்து வைத்தார்.
ரியோ ராஜ்
பூ தொட்டியுடன் முன்னதாக நடனமாடிய ரியோ தனது மனைவியுடன் வீடியோ வாயிலாக பேசினார். மேலும் பயத்துடனேயே உள்ளே செல்வதாக கூறினார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பாக கடந்த சீசனை போல மெடல் கொடுக்காமல் இம்முறை ரோஜாப் பூ தொட்டியை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார் கமல். ரோஜாப்பூ தொட்டியுடன் உள்ளே சென்றார் ரியோ.
சனம் ஷெட்டி
ரியோ ராஜை தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இரண்டாவது போட்டியாளரான சனம் ஷெட்டியை அன்போடு நலம் விசாரித்தார் கமல் ஹாசன். கமலை தன்னுடைய இன்பைரேஷன் என்று புகழ்ந்து தள்ளிய சனம், தன்னுடைய வெற்றிக்கு காரணம் தமிழ் மக்கள்தான் என்றார்.
நடிகை ரேகா
பிக்பாஸ் சீசன் 4ல் மூன்றாவது போட்டியாளராக நடிகை ரேகா பங்கேற்றுள்ளார். வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போன்று இருந்தார் ரேகா. இதுவரை மற்றவர்களையே சார்ந்து வாழ்ந்து வந்ததால் தற்போது தனியாக வாழ கற்றுக்கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக கமலுடன் கதைத்தார் ரேகா. வீடியோ மூலம் அமெரிக்காவில் இருக்கும் தனது மகளுடன் பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பாலாஜி முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பவர் பாலாஜி முருகதாஸ். மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பட்டங்களை கைப்பற்றியிருக்கும் பாலாஜி முருகதாஸ், ஆர்கே சுரேஷ் நடித்த 'டைசன்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
அனிதா சம்பத்
பிக்பாஸ் சீசன் 4ன் ஐந்தாவது போட்டியாளராக செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக்பாஸ் மேடையிலேயே படபடவென பொறிந்து தள்ளினார் அனிதா சம்பத். எழுத்தாளர் ஆர் சி சம்பத்தின் மகளான அனிதா சம்பத், முதல் பார்வையிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
ஷிவானி நாராயணன்
பிக்பாஸ் சீசன் 4ல் ஆறாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை ஷிவானி நாராயணன். குட்டி ஃபிராக்கில் தொடை தெரிய நடனமாடிய ஷிவானி நாராயணன், ட்ரெடிஷ்னல் உடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
ஜித்தன் ரமேஷ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது போட்டியாளராக நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். ஜித்தன் ரமேஷுக்கு அவரது சகோதரரான நடிகர் ஜீவா வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
பாடகர் வேல்முருகன்
பிக்பாஸ் சீசன் 4ன் 8வது போட்டியாளராக நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். மேடையில் பாட்டுப்பாடிய வேல்முருகன், இடையிடையே நடனமாடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவரது பர்ஃபாமன்ஸின் போது ஃபேக் ஆடியன்ஸ் சத்தமும் பயன்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்கது. இறுதியாக கமலை வாழ்த்தியும் அசத்தல் பாடலை பாடினார் வேல்முருகன்.
நடிகர் ஆரி
பிக்பாஸ் சீசன் 4ன் 9வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பவர் நடிகர் ஆரி. மாயா, ரெட்டைச்சுழி ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஆரி. மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுத்த ஆரி, கற்றுக்கொள்ளும் மேடையாக பிக்பாஸை பார்ப்பதாக கூறியுள்ளார்.
மாடல் சோக சேகர்
பிக்பாஸ் சீசன் 4ன் நிகழ்ச்சியின் 10வது போட்டியாளராக சோம சேகர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மாடலான இவர் சில திரைப்படங்களிலும் விளம்பரப் படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
கேப்ரில்லா
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் 11வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் கேப்ரில்லா. குழந்தை நட்சத்திரமாக தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கச்சியாக நடித்திருந்தார். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார்.
அறந்தாங்கி நிஷா
பிக்பாஸ் வீட்டிற்குள் 12 வது போட்டியாளராக ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் அறந்தாங்கி நிஷா. தனக்கே உரிய ஸ்டைலில் கலகலவென பேசிய நிஷா, கப்பு முக்கியம் பிகிலு என்று கப்போடுதான் வருவேன் என்றார். ஓபனிங்கிலேயே ஒரு காலத்துல ரூம்ல பேசினோம் இப்போ ஜூம்ல பேசுறோம் என்று அசத்தினார்.
ரம்யா பாண்டியன்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் 13வது போட்டியாளராக நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். ரகிட ரகிட உள்ளிட்ட சில பாடல்களுக்கு செம குத்து குத்திய ரம்யா பாண்டியன் அதே கெத்தோடு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
சம்யுக்தா
பிக்பாஸின் 14வது போட்டியாளராக சம்யுக்தா பங்கேற்றுள்ளார். ஃபேஷன் டிசைனரான இவர் சில மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி கொள்வதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறியுள்ளார்.
சுரேஷ் சக்ரவர்த்தி
பிக்பாஸின் 15வது போட்டியாளராக சமையல் கலைஞர் சுரேஷ் சக்ரவர்த்தி பங்கேற்றுள்ளார். இவர் அழகன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பாடகர் ஆஜித்
பிக்பாஸின் 16 வது போட்டியாளராக பாடகர் ஆஜித் பங்கேற்றுள்ளார். நடனம் டான்ஸ் என பிக்பாஸ் மேடையில் கலக்கிய அவர் வெளி நபர்களிடம் பழகிய அனுபவம் அந்த அளவுக்கு இல்லை என்றார். சூப்பர் சிங்கர் ஜூனியரில் டைட்டில் வின்னர் ஆனார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago