Editorial / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ், தொடர்ந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான ‘சாஹோ’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரன வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ‘பிரபாஸ் 20’ திரைப்படத்தில் நடிக்கின்றார். பூஜா ஹெக்டே இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.
தொடர்ந்து, மகாநதி/நடிகையர் திலகம் திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் ‘பிரபாஸ் 21’ திரைப்படத்திலும் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘பிரபாஸ் 22’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓம் ராவத் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.
இது தீமையை வெற்றிகொள்ளும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் என, திரைப்படகுழு உத்தியோகப்பபூர்வமாக அறிவித்துள்ளது.
‘பாகுபலி’ திரைப்படத்தில் மெகா வெற்றிக்கு பிறகு இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகி வருகிறார்.
2021ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
55 minute ago
2 hours ago