J.A. George / 2022 ஜனவரி 24 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அண்மையில் அறிவித்தனர்.
பிரிவை அறிவித்த பிறகு ஐதராபாத்தில் பிஸியாக இருக்கும் ஒரே ஹோட்டலில் இருவரும் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி விசாரித்த போது, பிரிவை அறிவித்த பிறகு அவர் மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம்.
அந்த வேலைகளுக்காக இருவரும் ஐதராபாத்தில் தங்கி இருக்கிறார்களாம். தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ள ஐஸ்வர்யா தற்போது மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளாராம்.
லேட்டஸ்ட் தகவலின்படி காதலர் தினத்திற்காக ரொமான்டிக் பாடல் ஒன்றை இயக்கி வருகிறாராம் ஐஸ்வர்யா. இதற்கான ஷுட்டிங் ஜனவரி 25ம் திகதி துவங்கி 27ம் திகதி நிறைவடைய உள்ளதாம்.
இதே போல் தனுஷும் மாறன், திருச்சிற்றலம்பலம், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான ஷுட்டிங்கிற்காக அவரும் ஐதராபாத் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா - தனுஷ் இருவருமே தங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதாக கூறப்பட்டது.
18 minute ago
27 minute ago
31 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
31 minute ago
35 minute ago