2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

புதிய சாதனை படைத்த ஷிவானி

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.

இந்த தொடரில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.இவரது நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஷிவானி நாராயணன்.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடரின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து இவர் விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

நடனம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட ஷிவானி,தனது நடன மற்றும் ஒர்க்கவுட் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

ஷிவானியின் புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் தினமும் ஏதேனும் ஒரு புகைப்படத்தையோ,வீடீயோவையோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.

சில நாட்களுக்கு முன் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள சாரியில் ஒரு நடன வீடீயோவை ரசிகர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ ஒரு நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது, தற்போது இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார் ஷிவானி.

 இதன் மூலம் பல தமிழ் நடிகைகளையும் முந்தி இந்த சாதனையை புரிந்துள்ளார்.இதனை ஷிவானி ரசிகர்கள் கோலாகலமாக ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X