2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பாகுபலி 2 வீடியோ வௌியானது: வீடியோ எடிட்டர் கைது

George   / 2016 நவம்பர் 22 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய “பாகுபலி” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார்' என்ற இரகசியம் உள்பட அனைத்து விடயங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ஒருசிறிய வீடியோ க்ளிப், சமூக இணையதளங்களில் லீக் ஆகியது. மிகப்பெரிய பாதுகாப்பையும் மீறி இந்த திரைப்படத்தின் க்ளிப்பிங்ஸ் லீக் ஆனது பாகுபலி 2' திரைப்படக்குழுவினர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதுகுறித்து சைபர் க்ரைம் பொலிஸாரிடம் புகார் செய்யப்பட்டது

இந்த புகாரின்பேரில் விசாரணை செய்த பொலிஸார், கிருஷ்ணா என்பவரை கைது செய்துள்ளனர். இவர் இந்த திரைப்படத்தின் வீடியோ எடிட்டராக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X