2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பிறந்தநாளில் சம்பளத்தை உயர்த்திய தீபிகா

George   / 2016 ஜனவரி 06 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, தனது  30ஆவது பிறந்த நாளான நேற்று தனது சம்பளத்தை 15 கோடி இந்திய ரூபாயாக உயர்த்தி விட்டார். 

கடந்த ஆண்டு தீபிகாவின் நடிப்பில் வெளியான பிகு, தமாஷா மற்றும் பஜிராவ் மஸ்தானி போன்றத் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று பொக்ஸ் ஒபிஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளன. 

இதில், தீபாவளி வெளியீடாக வந்த பஜிராவ் மஸ்தானி சுமார் 310 கோடி இந்திய ரூபாய்க்கு மேல் உலகளவில் தனது வசூலை ஈட்டியுள்ளது.

எப்போதுமே பெண்களுக்கான சம்பளம் குறைவாகவே உள்ளது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தீபிகாவின் இந்த முடிவு பெண் நடிகைகளிடையே வரவேற்பையும் தயாரிப்பாளர்களிடம் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X