Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 20 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியத் திரையுலகில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்று பிலிம்ஃபெயார் விருதுகள்.
இதில் தென்னிந்தியாவுக்கென்று தனியாக விருது வழங்கும் விழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்கான விழா தென்னிந்திய மாநகரங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 63ஆவது தென்னிந்திய பிலிம்ஃபெயார் விருதுகள் வழங்கும் விழா, ஹைதராபாத்தில் சனிக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஆரம்பமான விருது வழங்கும் விழா நள்ளிரவு 12 மணிவரை தொடர்ந்தது
நிகழ்வை அலங்கரித்த நட்சத்திரங்கள்
மெகாஸ்டார் சிரஞ்சீவி, மம்முட்டி, சூர்யா, சியான் விக்ரம், ராணா, அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா, புனித் ராஜ்குமார், நிவின் பாலி, ஆர்யா, நயன்தாரா, தனுஷ், வெங்கடேஷ், ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரஹ்மான், அனுஷ்கா, பாயல் கோஷ், ப்ரணீதா, எமிஜெக்சன், சாய் பல்லவி, ராகுல் ப்ரீதி சிங், ரித்விகா சிங், பாருல் யாதவ், கெத்தரனின் திரேஷா, பார்வதி உள்ளிட்ட பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மூத்த நட்சத்திரங்களான ஜயபிரதாப், குஷ்பு, சுதாராணி, மேகன்பாபு, தசாரி நாராயண ராவ், ஜயசுந்தர உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சிறந்த தமிழ் திரைப்படமாக காக்கா முட்டை தெரிவாகியதுடன் சிறந்த தமிழ் இயக்குநராக மோகன் ராஜாவும் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், சிறந்த நடிகராக விக்ரம், சிறந்த நடிகையாக நயன்தாரா, சிறந்த துணை நடிகராக அரவிந்த்சாமி, சிறந்த துணை நடிகையாக ராதிகா சரத்குமார், சிறந்த பாடலாசிரியராக மதன் கார்க்கி, சிறந்த பாடகராக சித் ஸ்ரீராம், சிறந்த பாடகியாக ஸ்வேதா மோகன் ஆகியோர் தெரிவாகினர்.
சிறப்பு ஜூரி விருது நடிகர் ஜெயம் ரவி, நடிகை ஜோதிகா ஆகியோருக்கும் சிறந்த அறிமுக நடிகர் விருது ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் கிடைத்தது.
விருதுகளின் முழுவிவரம்
சிறந்த ஒளிப்பதிவாளர்
கே.கே.செந்தில் குமார் - பாகுபலி
சிறந்த நடன இயக்குநர்
சேகர் வி.ஜே.குங்பூ குமாரி (புருஸ்லீ -
தி பைட்டர்)
வாழ்நாள் சாதனையாளர் விருது
டொக்டர்.எம்.மோகன் பாபு
சிறந்த அறிமுகம்
ஜி.வி.பிரகாஸ்குமார் - டார்லிங் - தமிழ்
அகில் அக்கினேய் -அகில் - தெலுங்கு
பிரக்யா ஜஸ்வால் - கான்சே - தெலுங்கு
சாய் பல்லவி - பிரேமம் - மலையாளம்
சிறந்த நடிகருக்கான ஜூரி விருதுகள் (பெண்)
அமலாபோல் (மில்லி) - மலையாளம்
ரஞ்சிதா ராம் ( ராணா) - கன்னடம்
ஜோதிகா (36 வயதினிலே)- தமிழ்
நித்தியா மேனன் - (மல்லி மல்லி இதி ராணி ரோஜு) - தெலுங்கு
சிறந்த நடிகருக்கான ஜூரி விருதுகள் (ஆண்)
ஜெயசூர்யா (சூ சுதி வட்மீகம்) - மலையாளம்
சஞ்சரி விஜய் (நானு அவனல்ல அவளு) - கன்னடம்
ஜெயம் ரவி (தனி ஒருவன்) - தமிழ்
நானி - (பஹலே பஹலே மகுடிவோய்) - தெலுங்கு
சிறந்த பின்னணி பாடகி
ஸ்ரேயா கோஷல் (காத்திருன்னு காத்திருன்னு - என்னு நின்டே மொய்தீன்) - மலையாளம்
இன்ஷாரா ராவோ (கரேயோளே - ராங்கி தரங்க) - கன்னடம்.
ஸ்வேதா மேனன் (என்ன சொல்ல - தங்க மகன்) - தமிழ்
கீதா மாதுரி - ஜீவநதி - பாகுபலி) - தெலுங்கு
சிறந்த பின்னணி பாடகர்
விஜய் ஜேசுதாஸ் - (மலரே நின்ன - பிரேமம்) மலையாளம்
சந்தோஷ் வெங்கி - (ராஜா ராணியேந்தே - ராட்டே) - கன்னடம்
சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் - ஐ) - தமிழ்
எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் (போறா ஸ்ரீமந்துடு - ஸ்ரீமந்துடு) தெலுங்கு
சிறந்த பாடலாசிரியர்
ரப்பீ அஹமட் (காத்திருன்னு.. காத்திருன்னு - என்னு நின்டே மொய்தீன்) - மலையாளம்
ஜயனாத் காய்கினி (நெருப்பே நித்திய மல்லிகே - கென்டசாம்பிகே)- கன்னடம்
மதன் கார்க்கி (பூக்களே சற்று ஓய்வெடுங்கள் - ஐ) - தமிழ்
ஸ்ரீவென்னெல்லா சீதாராம சாஸ்திரி (போறா ஸ்ரீமந்துடு - ஸ்ரீமந்துடு)- தெலுங்கு
சிறந்த இசையமைப்பாளர்
எம்.ஜெயசந்திரன் (என்னு நின்டே மொய்தீன்) - மலையாளம்
ஸ்ரீதர் வீ.சம்பாஹரம் (கிருஷ்ண லீலா) - கன்னடம்
ஏ.ஆர்.ரஹ்மான் (ஐ) - தமிழ்
தேவி ஸ்ரீ பிரசாத் (ஸ்ரீமந்துடு)- தெலுங்கு
சிறந்த துணை நடிகர்
டுவினோ தோமஸ் (என்னு நின்டே மொய்தீன்) - மலையாளம்
சாய்குமார் (ராங்கிதராங்க) - கன்னடம்
அரவிந் சுவாமி (தனி ஒருவன்) - தமிழ்
அல்லு அர்ஜூன் (ருத்ரமாதேவி) - தெலுங்கு
சிறந்த துணை நடிகை
லீனா (என்னு நின்டே மொய்தீன்) - மலையாளம்
சுதாராணி (வாஸ்து பார்க்கற) - கன்னடம்
ராதிகா சரத்குமார் (தங்க மகன்) - தமிழ்
ரம்யா கிருஷ்ணன் (பாகுபலி) - தெலுங்கு
சிறந்த திரைப்படம்
பாதேமாறி - மலையாளம்
ரங்கி தரங்கா - கன்னடம்
காக்கா முட்டை - தமிழ்
பாகுபலி - தெலுங்கு
சிறந்த இயக்குநர்
ஆர்.எஸ்.விமல் (என்னு நின்டே மொய்தீன்) - மலையாளம்
அனுப் பகதாரி (ரங்கி தரங்கா) - கன்னடம்
மோகன் ராஜா (தனி ஒருவன்) - தமிழ்
எஸ்.எஸ்.ராஜமௌலி (பாகுபலி) - தெலுங்கு
சிறந்த நடிகை
பார்வதி (என்னு நின்டே மொய்தீன்) - மலையாளம்
பாருல் யாதவ் (ஆட்டக்காரா) - கன்னடம்
நயன்தாரா (நானும் ரௌடி தான்) - தமிழ்
அனுஷ்கா ஷெட்டி (ருத்ரமாதேவி) - தெலுங்கு
சிறந்த நடிகர்
மம்முட்டி (பாதேமாறி) - மலையாளம்
புனித் ராஜ்குமார் (ரணவிக்ரமா) - கன்னடம்
விக்ரம் (ஐ) - தமிழ்
மகேஷ்பாபு (ஸ்ரீமந்துடு) - தெலுங்கு
தமிழ்த் திரையுலகில் விருது பெற்றவர்கள் விவரம்...
சிறந்த படம் - காக்கா முட்டை
சிறந்த இயக்குனர் - மோகன் ராஜா (தனி ஒருவன்)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (ஐ)
சிறந்த நடிகர் - விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை - நயன்தாரா (நானும் ரௌடிதான்)
சிறந்த துணை நடிகர் - அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
சிறந்த துணை நடிகை - ராதிகா சரத்குமார் (தங்க மகன்)
சிறந்த பாடலாசிரியர் - மதன் கார்க்கி ( ஐ - பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..)
சிறந்த பாடகர் - சித் ஸ்ரீராம் (ஐ - என்னோடு நீ இருந்தால்...)
சிறந்த பாடகி - ஸ்வேதா மோகன் (தங்கமகன் - என்ன சொல்ல...)
சிறந்த விமர்சகர் விருது - நடிகர் - ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த விமர்சகர் விருது - நடிகை - ஜோதிகா (36 வயதினிலே)
சிறந்த அறிமுகம் - நடிகர் - ஜி.வி.பிரகாஷ்குமார்
தமிழ், தெலுங்கில் நடித்துள்ள ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மோகன் பாபுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago