2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

மீண்டும் இணைந்த விஷால் - சுந்தர் சி கூட்டணி

R.Tharaniya   / 2025 நவம்பர் 04 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் படப்பிடிப்பு இறுதிகட்ட நிலையில் இள்ளது. இதனை முடித்துவிட்டு விஷால் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார்.

‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. சுந்தர்.சி. இயக்கத்தில் ஆம்பள, மத கஜ ராஜா, ஆக்‌ஷன் படங்களில் விஷால் நடித்துள்ளார்.

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில், தமன்னா மற்றும் கயாடு லோகர் கதாநாயகிகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X