2025 ஜூன் 21, சனிக்கிழமை

மன்னிப்பு

R.Tharaniya   / 2025 ஜூன் 09 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பொலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகிய "சித்தாரே ஜமீன் பர்" என்ற திரைப்படம் ஜூன் 20ஆம் திகதி வெளியாக இருக்கிறது. தமிழில் "கல்யாண சமையல் சாதம்" என்ற படத்தை  இயக்கிய பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். 

இந்த படத்தின் புரமோஷன் பேட்டி ஒன்றில் அமீர்கான் பேசுகையில்: "லால் சிங் சத்தா’ திரைப்படம் தோல்வியடைந்த பிறகு மன உளைச்சலில் இருந்தேன். "சித்தாரே ஜமீன்தார் பர்’ படத்தில் இருந்தும் நான் விலக முடிவெடுத்தேன்.

இயக்குநர் பிரசன்னா என்னை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அதே நேரத்தில், ‘நீங்கள்தான் என்னுடைய முதல் சாய்ஸ்’ என்று கூறினார். அதன் பிறகு எனக்கு பதிலாக, இந்த படத்தில் ஹிந்தியில் பர்கான் அக்தர் மற்றும் தமிழில் சிவகார்த்திகேயனை இயக்குநர் தேர்வு செய்தார்.

அதன் பிறகு தான், எனக்கு திடீரென, ‘இந்த படத்தில் நடிக்கலாம், நல்ல ஸ்கிரிப்ட்’ என்று தோன்றியது. என்னுடைய முடிவை பிரசன்னாவிடம் சொல்லிய போது, ‘நீங்கள்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர். நீங்கள் எடுப்பதுதான் முடிவு. எப்போதுமே என்னுடைய முதல் சாய்ஸ் நீங்கள்தான்,’ என்று கூறினார்.

அதன்பிறகு பர்கான் அக்தர், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரிடமும் பேசினேன். இருவருமே, ‘இது நீங்கள் நடிக்க வேண்டிய படம் தான்,’ என்று கூறிய போது, அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர்கள், ‘மன்னிப்பு எல்லாம் தேவையில்லை.

இது உங்களுக்கான படம், தாராளமாக நடியுங்கள்,’ என்று கூறினார்கள். இருவருமே ஆதரவாக இருந்தார்கள். அதன்பிறகு தான், இந்த படத்தில் நான் நடித்தேன்," என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .